15/Apr/2021 11:05:46
புதுக்கோட்டை, ஏப்: மீன்களின் இனப்பெருக்கத்துக்காக கடலில் விசைப்படகுகளில் மீன்பிடிக்கத் தடைக்காலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(ஏப்.15) தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய இருமீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 550 விசைப்படகுகளில் சுமார் 2500 மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வாரத்தில் சனி, திங்கள், புதன் ஆகிய நாட்களில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக்கொண்டு அடுத்தடுத்த நாட்களில் கரைக்குத் திரும்புவது வழக்கம்.
வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாளாகவும் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மீன்கள் இனப்பெருக்கத் துக்காக கடந்த ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்க அரசு தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், 61 நாள் தடை காலத்தைப் பயன்படுத்தி மீனவர்கள் விசைப்படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகள், சேதமடைந்த மீனபிடி வலைகளை சீரமைக்கும் பணிகளை மீனவர் கள் மேற்கொள்ளவுள்ளனர். இதையொட்டி வெளியூர்களில் இருந்து வரவழைக்கப் படும் விசைப்படகு தொழில்நுட்ப பணியாளர்கள் மூலம் பழுது நீக்கும் பணிகள் மேற்கொள் ளப்படவுள்ளதால், மீன்கள் நிறைந்து காணப்படும் மீன்பிடி தளம் வரும் நாட்களில் படகுக ளை பழுதுபார்க்கும் தொழில் கூடமாக மாறிவிடும்.
இந்தப்பழுதுகளை நீக்க ஒவ்வொரு படகுக்கும் பல ஆயிரம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு அளிக்கும் ரூ,5,000 நிதியுதவியை அதிகரித்து வழங்கினால் உதவிகரமாக இருக்கும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் கிழக்கு கடற்கரைபகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஏப்ரல். 15-ஆம் தேதி முதல் ஜூன் 14 -ஆம் தேதிவரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக கடைபிடிக் கப்பட்டு வருகிறது.
இதனால், நேற்றிரவு(ஏப்.14) கரை திரும்பிய படகுகள் அனைத்தும் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தடைகாலத்தைப் பயன்படுத்தி மீன்பிடி வலைகள் மற்றும் படகுகளின் பழுது நீக்கும் பணிகளில் ஈடுபடுவார் கள் என மீனவர்கள் தெரிவித்தனர்.