logo
திருமயம் சட்டமன்ற தொகுதியில் ஒரு  வாக்குச்சாவடி இடமாற்றம்

திருமயம் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி இடமாற்றம்

04/Apr/2021 10:07:20

புதுக்கோட்டை, ஏப்: திருமயம் சட்டமன்ற தொகுதி, வாக்குச்சாவடி எண்-19 ஊராட்சி சேவை மைய கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:  தமிழக சட்டமன்ற  தேர்தல் 6.4.2021 அன்று நடைபெறுவதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், 181-திருமயம் சட்டமன்ற தொகுதி, வாக்குச்சாவடி  எண்-19 கூடலூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த  வாக்குச்சாவடி மையக்கட்டிடத்தின் கட்டுமான பணி முடிவடையாத நிலையில் இருப்பதால் வாக்குச்சாவ டிக்கு மிக அருகில் உள்ள ஊராட்சி சேவை மைய கட்டிடத்திற்கு மாற்றுவதற்கு   தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குச்சாவடி எண்-19 ஊராட்சி சேவை மைய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார். 

Top