logo
திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஏமாளி கணவர் புகார்

திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஏமாளி கணவர் புகார்

21/Apr/2021 06:56:19

ஈரோடு, ஏப்: திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் கணவர் மற்றும் குடும்த்தினர்  ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாள ரிடம் புகார் மனு அளித்தனர்.

 ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கும்  கோவையை சேர்ந்த தேவி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த நான்கு நாட்களுக்கு பிறகு மறு அழைப்பிற்காக கோவை சென்றுள்ளனர். பின்னர் தனது அண்ணன் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற தேவி பல நாட்களாகியும் வராததால் சந்தேகமடைந்த முருகேசன் இதுகுறித்து விசாரித்துள்ளார்.

அப்போது தேவிக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்று இரண்டு குழந்தைகள் இருப்பதும் தற்போது வேறு ஒருவடன் திருமணம் நடைபெற இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தான் ஏமாற்றமடைந்தது உணர்ந்த முருகேசன் ஈரோடு மாவட்ட காவல்து றை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். 

அந்த மனுவில், கோவையை சேர்ந்த தேவி  தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதா கவும் தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எனது திருமணத்தின் போது வாங்கிய தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 1.30 லட்சத்தையும் திரும்பப் பெற்றுதர வேண்டும். பலரையும் திருமணம் செய்து ஏமாற்றி வரும்  தேவி மற்றும் அவருக்கு துணை போகும்தரகர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில்  தெரிவித்துள்ளார்.

Top