04/Apr/2021 08:50:08
புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் தொடர்பாக இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற (6.4.2021)செவ்வாய்க்கிழமை நடைபெறுவதை தொடர;ந்து கடந்த 26.2.2021 பிற்பகல் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுநாள் வரை தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் மற்றும் இதர பரிசு பொருட்கள் வழங்கியது தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 3 வழக்குகளும், விராலிமலை சட்டமன்ற தொகுதியில் 5 வழக்குகளும் மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 2 வழக்குகளையும் சேர்த்து மொத்தம் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.