logo
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக  இதுவரை ரூ. 20 லட்சம் அபராதம்  விதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ. 20 லட்சம் அபராதம் விதிப்பு

15/May/2021 07:31:19

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி முக கவசம் அணியாமல் வெளியில் வந்தவர்களிடமிருந்து இதுவரை ரூ.20 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்கண்காணிப் பாளர் எல். பாலாஜிசரவணன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை உழவர் சந்தையில் ஸ்பீடு தொண்டுநிறுவனம் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கும் நிகழ்ச்சியை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜிசரவணன்  தொடக்கி வைத்து கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு காலங்களில் தேவையில்லாமல் சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சுற்றித்திரிந்தவர்களிடமிருந்து  இதுவரை ரூ. 20 லட்சம்  அபதாரம் வசூலிக்கப்பட்டது 

தமிழகத்தில் நாளுக்கு நாள்  கொரோனா பாதிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தேவை இல்லாமல் சுற்றி திரியாமல் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியே வரவேண்டும். கூட்டம் கூட்டமாக  வெளியில் வருவதால் மேலும் வைரஸ் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துஉள்ளது. 

இதுபோன்று தேவையில்லாத காரணங்களால் சாலைகளில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களை பிடித்து அவர்கள் மீது சட்டரீதியான வழக்குப் பதிவு செய்து தமிழக அரசு அறிவித்துள்ள அபராதத்  தொகையையும் வசூலிக்கப்படும்.. 

காவல்துறையினருடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  இணைந்து பணியாற்ற  அனுமதிக் கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித் தார்.

புதுக்கோட்டை  மாவட்டத்தில்கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதுஅதிகரித்துக் காணப்படுகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று  மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது.  ஆனால் இதை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிக்கவில்லை.

 இதையடுத்து முக கவசம் அணியாமல் வந்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதையும் பெரும்பாலான மக்கள் கண்டு  கொள்ளவில்லை.  மாவட்டத்தில் கொரோனா தாக்கம்  மீண்டும் அதிகரித்தது. இதையடுத்து  மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி  பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

 இதையடுத்து மாவட்டம் முழுவதும் நகராட்சி, போரூராட்சிகளில் துப்புரவு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் கள்,  சுகாதார ஆய்வாளர்கள், வருவாய்த்துறையினர் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணிந்து வராதவர்களுக்கு  ரூ. 200 அபராதம் விதிக்கின்றனர். மாவட்டம் முழுவதும் தினசரி சராசரியாக 200 பேருக்கு அபராதம் விதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.. 


Top