logo
ஈரோட்டில் காணாமல் போன 53 செல்லிடப்பேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ஈரோட்டில் காணாமல் போன 53 செல்லிடப்பேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

05/Dec/2020 03:51:30

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் காணாமல்போன 53 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை செல்லிடப்பேசிகளை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.  இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: வங்கி மேலாளர் பேசுவது போல் பேசி    ஏடிஎம் அட்டையில் உள்ள 16  இலக்க எண் மற்றும் சி.வி.வி.எண் மற்றும் ஒ.டி.பி. எண் ஆகிய விவரங்களை பெற்று வங்கிக் கணக்கிலிருந்து பணம் மோசடி   செய்தாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளது. 

 இந்த புகார்களின் போரில் சைபர்கிரைம் பிரிவு மூலமாக எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையால் நடப்பாண்டில் ரூ.5,15,738 பணம், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வங்கியின் மூலமாக திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.  இதுபோல் செல்லிடப்பேசி தொலைந்துவிட்டதாக பெறப்பட்ட புகாரின் பேரில் ரூ.6,33,136 மதிப்புள்ள 53 செல்லிடப் பேசிகள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம்   ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  ஈரோடு மாவட்ட சமூக ஊடகப் பிரிவு சமூக வலைதளங்களில் கணினி  குற்றங்கள், சாலை  பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியம்,பெண்கள் சமூக ஊடகங்களை எப்படி கையாள்வது,  குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பு போன்றவை குறித்து விழிப்புணர்வு,  மாவட்டத்தில் நடக்கும்   குற்றங்கள் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.  சமூக ஊடகப்பிரிவு குறித்த தகவல் அறிய முகநூல், யுடியூப், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் Erode District Police என்ற பக்கத்தினை பின்தொடரலாம். 

 செல்லிடபேசிகளில் வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறுபவர்கள்,  செல்லிடபேசி கோபுரம் அமைக்க இடம் கோருபவர்கள்,  இணையத்தில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப முன்பணம் கோருபவர்கள் போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதோடு, எந்த விவரத்தையும் தெரிவிக்கக்கூடாது.  சமூகவலைதளங்களை பயன்படுத்துபவர்கள் தெரிந்தநபர்களிடம் மட்டுமே தனிப்பட்ட கருத்துகள்,   புகைப்படங்கள்,  பிற விவரங்களை பகிர வேண்டும் என்றார்.

Top