logo
திருமயம்  ஒன்றியத்தில்  93  கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து  வாக்கு சேகரித்து பிரசாரம்

திருமயம் ஒன்றியத்தில் 93 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து வாக்கு சேகரித்து பிரசாரம்

28/Mar/2021 11:03:45

புதுக்கோட்டை, மார்ச்: திருமயம் சட்டமன்ற தொகுதியில்  திருமயம்  ஒன்றியத்துக்குள்பட்ட 93 கிராமங்களில்  அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து  ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்து  வாக்கு சேகரித்தார்.

 திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.கே. வைரமுத்து போட்டியிடுகிறார். அனைத்துத் தரப்பு மக்களின் மதிப்பைப்  பெற்றுள்ள இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருமயம்  தொகுதிக் குள்பட்ட பொன்னமராவதி, அரிமளம்,  திருமயம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 33 ஊராட்சிகளைச் சேர்ந்த 400 -க்கும் மேற்பட்ட  கிராமங்களில்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.


இந்நிலையில், திருமயம்   ஒன்றியத்துக்குள்பட்ட வி.லட்சுமிபுரம்  கிராமத்தில்  காலை 7 மணியளவில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து  பிரசாரத்தைத் தொடங்கி  கிராம மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:  திமுக ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு ஒரு ரூபாய் கூட வழங்கியதில்லை.  ஆனால்  அதிமுக அரசு கடந்த பொங்கல் பண்டிகைக்காக   ஒரு குடும்ப அட்டைக்கு  ரூ.2500-ம், பொங்கல் பரிசையும்  வழங்கியது மேலும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம்  போன்ற எண்ணற்ற  நலத்திட்டங்கள் வழங்கியதை நீங்கள் மறக்க மாட்டீர்கள். 

தற்போது உள்ள தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசம் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அவை அனைத்தும் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கு அதிமுக அரசு மீண்டும் அமையும்  வகையில் இரட்டை இலைச் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து,   ராமன்வயல், நல்லிப்பட்டி, மணப்பட்டி, சோழம்பட்டி, பெருந்துறை, கரையான்பட்டி, முள்ளிப்பட்டி, மெய்யபட்டி, திருவம்பட்டி,  குரும்பபட்டி, அரசம்பட்டி, ஊனையூர், கரணத்தான்பட்டி, கீழ குளத்துப்பட்டி, கொசப்பட்டி, சவேரியார்புரம், காயாம்பட்டி, தேத்தாம்பட்டி, கோவில்பட்டி, அரண்மனைப்பட்டி,  ஆதனூர், புதுக்குடியிருப்பு, நயினாபட்டி, கோனாபட்டு அழகப்பநகர், ஆரோக்கியபுரம், வெங்களூர்,  காட்டுபாவாபள்ளிவாசல்.

ஈழக்குடிப்பட்டி, நெய்வாசல், மஞ்சினிப்பட்டி, பில்லமங்கலம், பி. அழகாபுரி,  பழந்தினாபட்டி, மேலவிடுதி, வலையன்வயல்,  துலையானூர், சந்தனவிடுதி, மூங்கித்தான்பட்டி, சமத்துவபுரம், மாவூர், மலைக்குடிப்பட்டி, பரளி, அம்மாபட்டி உள்பட 93 கிராமங்களில் ஒரே நாளில்  சுற்றுப்பயணம் செய்து அதிமுக  10 ஆண்டுகால சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதியிலுள்ள சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள்  மற்றும் பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  


Top