28/Feb/2021 11:06:38
புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, குளமங்கலத்தில் உள்ள ஆசியாவிலேயே மிக உயரமான 32 அடி உயரத்தில் குதிரை அமைக்கப்பட்டுள்ள அருள்மிகு பெருங்காரையடி மிண்ட ஐயனார் கோயில் திருவிழாவில் 2000 க்கும் மேற்பட்ட மாலைகள் சார்த்தி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா குளமங’களம் ஊராட்சியில் உள்ள பிரசிதிப்பெற்ற ஆசியாவிலேயே மிக பெரிய 32 அடி உயரமான குதிரை அமைந்துள்ள ஸ்ரீ பெருங்காரையடி மிண்ட ஐயனார் கோவில் மாசிமக பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது.
இக்கோயிலின் சிறப்பம்சமாக வேண்டுதல்நிறைவேறிய பிறகு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். அந்த அளவுக்கு மிக சக்திவாய்ந்த கோயிலாகும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடனை செலுத்து விதமாக புதுக்கோட்டை மற்றும் வெளி மாவட்டங்கள், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இக்கோயிலுக்கு வந்து இங்கு அமைந்துள்ள 32 அடி உயர குதிரைக்கு பெரிய மாலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக 2000 -க்கும் மேற்பட்ட மாலைகள் குதிரைக்கு சார்த்தி சுற்றுவட்டார பொதுமக்கள் வந்து வழிபட்ட சென்றனர்