logo
முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண உதவித்தொகை விநியோகம்: புதுக்கோட்டையில் அமைச்சர்கள்  எஸ். ரகுபதி , சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண உதவித்தொகை விநியோகம்: புதுக்கோட்டையில் அமைச்சர்கள் எஸ். ரகுபதி , சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

15/May/2021 10:31:03

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை கலீப் நகரில் உள்ள நகர கூட்டுறவு நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, எம்எல்ஏ-க்கள் டாக்டர் வை. முத்துராஜா(புதுக்கோட்டை), எம். சின்னத்துரை(கந்தர்வகோட்டை) உள்ளிட்டோர்  முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி, சுற்றுச்சூழல்  காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று  முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண உதவித் தொகையின் முதல்தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை    தொடங்கி வைத்தனர். 

சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி பேசுகையில், தமிழக முதல்வராக மு,க.ஸ்டாலின்  பொறுப்பேற்று நடைபெறும் முதலாவது நிகழ்ச்சியில் பங்கேற்பதில்  மிகவும் பெருமைப்படுவதாகவும்,  இது மிகவும மறக்க முடியாத நிகழச்சி இது மக்களுககு பயன் பெறுகின்ற துவக் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. 

கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்க ளுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையில்  முதல்வர் அறிவித்த பொது விநியோகத்திட்ட அரிசி பெறும் குடும்ப மின்னணு குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்.2,000  வீதம் நிவாரணத் தொகை முதல் தவணையாக மே மாதத்தில் அந்தந்த நியாய விலைக் கடைகளில் டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட உள்ளது என்றார். 

அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசுகையில், அமெரிக்கா  போன்ற நாடுகளில் 60 சதவீத  பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதேபோன்று தமிழ்நாட்டிலும்  இந்த நிலை வரவேணடும். தடுப்பூசியை போடடு கொள்வதற்கு யாரும் அச்சமடையத் தேவையில்லை.  நான் மற்றும் இங்குள்ள அனைவரும்  தடுப்பூசி  போட்டு கொள்ளாமல்  தடுப்பூசி போடடுக் கொள்வதன்  மூலம் கொரோனா பெருந்தொற்று நம்மை அணுகாது, உயிரிழப்பு ஏற்படுவது  தடுக்கப்படும் என்றார். 



 மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கூறியதாவது:  1007 நியாய விலைக் கடைகள் மூலமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4,65,947 அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு (இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உள்பட)   வழங்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ரூ. 89 கோடியே 26 லட்சத்தி 28 ஆயிரம் தொகை வரப்பெற்றுள்ளது. கொரோனா திவாரணண விநியோக பணிக்கு தாலுகா வாரியாக துணைபதியாளர் நிலையில் பொறுப்பு அலுவலர்க நியமிக்கப்பட்டுள்ளனர். வட்டார வாரியாக கூட்டுறவு சார்பதிவாளர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சங்கங்கள் வாரியாக செயலாளர்கள் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைபதிவாளர் (பொது விநியோக திட்டம் ) அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு ஒருங்கிணைப்பு அலுவலராக (Nodal Officer) துணைப்பதிவாளர் (பொவிதி) நியமிக்கப்பட்டுள்ளார்.  புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள 26 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளுக்கு இதுவரை ரூ.80 கோடி நகர்வு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண தொகை விநியோகத்தின் போது விற்பனையாளர்கள் கண்டிப்பாக முககவசம் மற்றும் கையுறை அணிந்திருக்கவும், சானிடைசர் பயன்படுத்தவும் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அனைத்து விற்பனையாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ளும் பொருட்டு 2 மீட்டர் இடைவெளியில் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா வைரஸ் நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2,000 பெற்றுச் செல்ல வேண்டும். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்  என்றார் ஆட்சியர்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் உமாமகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், திமுக நிர்வாகிகள் கே.கே. செல்லப்பாண்டியன், க.நைனாமுகமது, எம்.எம்.பாலு, மதியழகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


Top