logo
ஈரோடு மேற்கு தொகுதியில் தபால்  வாக்குக்கான  வாக்குசீட்டு  பிரித்து அனுப்பும் பணி தொடக்கம்

ஈரோடு மேற்கு தொகுதியில் தபால் வாக்குக்கான வாக்குசீட்டு பிரித்து அனுப்பும் பணி தொடக்கம்

27/Mar/2021 07:41:45

ஈரோடு, மார்ச்: ஈரோடு மேற்கு தொகுதியில் தபால்  வாக்குக்கான  வாக்குசீட்டு  பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் 80 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் மூலம் ஓட்டு போட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. விருப்பப்பட்டவர்கள் நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று ஓட்டு அளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது .அதற்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. 

இதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள், பிறத்துறை  ஊழியர்கள்  தபால் ஓட்டு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என 13 ஆயிரத்து 160 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் இவர்களுக்கு தபால் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இன்று ஈரோடு ஆர்.டி.ஓ.  அலுவலகத்தில் மேற்குத் தொகுதியில் தபால் ஓட்டு போடுபவர்களுக்கான தபால் ஓட்டு சீட்டு பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது. நாளை ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 13,160 ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற உள்ளது. அந்தந்த தொகுதியில் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு ஒரு  பெட்டி வைக்கப்படும். அதில் அவர்கள் தபால் ஓட்டினை பதிவு செய்யலாம். அல்லது அவர்கள் தபால் மூலம் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளைக்கு ஓட்டு போட முடியாதவர்கள் மூன்றாம் கட்ட பயிற்சியிலும் தபால் மூலம் ஓட்டு  செலுத்தலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இன்று நடந்த பணியை மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆர் டி ஓ.வுமான சைபுதீன் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தொகுதிகளிலும் தபால் ஓட்டு சீட்டு பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது.

Top