logo
ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம்: அமைச்சர்கள் திறப்பு

ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம்: அமைச்சர்கள் திறப்பு

08/Feb/2021 07:21:00

ஈரோடு, பிப்: இந்து சமய அறநிலையத் துறையில் கோவையை மண்டலமாக ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தது. நிர்வாக வசதிக்காக அதனை ஈரோடு, நாமக்கல் ஒரு மண்டலமாகவும், திருப்பூர், கரூர் ஒரு மண்டலமாகவும், கோவை, நீலகிரி மாவட்டங்கள் ஒரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

 ஈரோடு இணை ஆணையர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு  திறந்து வைத்தனர்.

 மண்டலத்தில் 2095 கோயில்களைக் கொண்ட ஈரோடு மண்டலத்திற்கு சென்னை தலைமையிட இணை ஆணையராக பணியாற்றி வந்த  மங்கையர்க்கரசி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கதிரவன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈரோடு மேற்கு கே.வி. ராமலிங்கம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு, பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top