logo
திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து பொன்னமராவதி ஒன்றியத்தில் 46 கிராமங்களில்  வாக்கு சேகரித்து பிரசாரம்

திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து பொன்னமராவதி ஒன்றியத்தில் 46 கிராமங்களில் வாக்கு சேகரித்து பிரசாரம்

23/Mar/2021 10:34:24

புதுக்கோட்டை, மார்ச்: திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து பொன்னமராவதி ஒன்றியத்தில் 46 கிராமங்களில்  வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார்.

பொன்னமராவதி ஒன்றியம்   திருக்களம்பூரில்  செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு  பிரசாரத்தைத் தொடங்கி  அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து பேசியதாவது: அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மாதம் தோறும் ரூ.1,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால்  அதிமுக அரசு மூன்றாவது முறையாக அமையும் வகையில் அமோக வெற்றி பெறச்செய்து ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து அண்ணாநகர் குமார பட்டி தச்சம்பட்டி கருப்புக்கு டிபட்டி வார்ப்பட்டு நல்லுார் வேந்தன் பட்டி மேலை சிவபுரி ஏனாதி தொட்டியம்பட்டி ஜெ ஜெ நகர் கட்டையாண்டிபட்டி . காயாம் புஞ்சை. பகவாண்டிபட்டி பிள்ளையா பட்டி மைலாப்பூர் உள்பட 46 கிராமங்களில் வாக்கு சேகரித்து சூறாவளி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்

. உடன் அதிமுக  நிர்வாகிகள் மற்றும்  பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் சென்றனர்.


Top