logo
பொதுமக்கள் முக கவசத்தை முறையாக அணிய வேண்டும்: ஈரோடு மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

பொதுமக்கள் முக கவசத்தை முறையாக அணிய வேண்டும்: ஈரோடு மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

15/May/2021 09:51:46

ஈரோடு, மே:பொதுமக்கள் முக கவசத்தை முறையாக அணிய வேண்டும் என ஈரோடு மாநகராட்சி ஆணையாளர்  மா. இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநகர் பகுதியில் தற்போது குடும் பம்  குடும்பமாக தொற்று வேகமாக பரவி வருகிறது. பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 தினமும் மாநகராட்சி அதிகாரிகள் மாநகர பகுதியில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை மீறி இயங்கும் கடைகள், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது அபராதம் விதித்து  வருகின்றனர். 

இந்நிலையில்  சித்தோடு பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வெளியே வந்த பொது மக்களில் பெரும்பா லானோர் முக கவசம் அணிந்து இருந்தாலும் அவற்றை முறையாக அணியாமல் வெளியே வந்தனர். 

அதாவது முக கவசத்தை  வாய், மூக்கு பகுதி முழுமையாக அடைத்து இருக்கும் வகையில் அணிந்திருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான மக்கள் மூக்கு பகுதியை மூடாமல் முக கவசம் அணிந்து வந்தனர். அவர்களை எச்சரித்த மாநகராட்சி அலுவலர்கள் அனைவருக்கும்  தலா ரூ .200 அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது: கொரோனா பரவால்லை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில மக்கள் இதைப் பற்றி கவலைப்படாமல் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அவர் வெளியே சுற்றும் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணிந்து இருந்தாலும் அவற்றை முறையாக அணிவதில்லை. 

ஒரு சிலர் கழுத்திற்கு கீழ் அணிந்துள்ளனர். இன்னும் சிலரோ மூக்கு பகுதியை மூடாமல் அரைகுறையாக அணிந்துள்ளனர். கொரோனா பொருத்தவரை 99 சதவிகிதம் மூக்கு வழியாக தான் கிருமி செல்கிறது. எனவேதான் முக கவசம் அணியும் போது வாய் மூக்கு பகுதி மூடி இருக்கும் வகையில் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். 

இந்த விஷயத்தில் பொது மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.  முறையாக முக கவசம் அறியாதவர்களுக்கும் தற்போது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சரியாக  முக கவசம் அணியாமல் வரும் 50-க்கு மேற்பட்ட மக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

Top