logo
வேளாண்  சட்டத்தை  திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

01/Jan/2021 04:27:33

ஈரோடு, ஜன: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில்    வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில்  மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜமால்தீன் தலைமை  வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் பர்ஹான் அஹமது, குறிஞ்சி பாஷா, தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆட்டோ.அப்துல் ரகுமான், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் பஜ்லுல் ரகுமான், சமூக ஊடக அணியின் மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்தீக், விமன் இந்தியா மூமென்ட் மாவட்ட பொதுச்செயலாளர் சபீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதே போல மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Top