logo
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4512 வேட்பு மனுக்கள் ஏற்பு; ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல்: சத்ய பிரத சாஹு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4512 வேட்பு மனுக்கள் ஏற்பு; ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல்: சத்ய பிரத சாஹு

22/Mar/2021 09:53:46

சென்னை: தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் சத்ய பிரத சாஹு மேலும் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1.70 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 3.09 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 3.19 கோடி பேரும் உள்ளனர். 7,192 திருநங்கைகள் உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 7,255 வேட்பு மனுக்களில் 4512 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 2743 நிராகரிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 3 பேர் மூன்றாம்பாலினத்தவர்.

இதுவரை இவிஜிப் செயலி மூலம் நேரடியாக பொதுமக்களிடமிருந்து  1971 புகார்கள் வந்துள்ளன. அதில், 1368 மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக 2121 புகார்கள் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தமிழகத்தில் மொத்தம் 12.87 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில்  1,49,567 பேர் அஞ்சல் முறையில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என்று கூறினார்.

Top