logo
சந்தைபேட்டை அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் லயன்ஸ் சங்கம் சார்பில் கட்டப்பட்ட  கலையரங்க மேடை திறப்பு

சந்தைபேட்டை அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் லயன்ஸ் சங்கம் சார்பில் கட்டப்பட்ட கலையரங்க மேடை திறப்பு

01/May/2021 10:21:40

புதுக்கோட்டை, ஏப் புதுக்கோட்டை  செஞ்சுரி  லயன்ஸ் சங்கம்   சார்பில்   சந்தை பேட்டைஅரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் கலையரங்க மேடை அமைக்கப்பட்டது.

 பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில்  சங்கத் தலைவர்  புவனேஸ்வரி தங்கமாளிகை   எஸ் . நடராஜன்  கலந்து கொண்டு கலையரங்க மேடையை திறந்து வைத்தார்.

இதில்  செஞ்சுரி  லயன்ஸ் சங்க  நிறுவனர் கண்ணன் , முன்னாள் தலைவர் குமார், பொருளாளர் சேது கார்த்திகேயன்ரவிஅன்புசண்முகம், சந்தை பேட்டை அரசு மகளிர்பள்ளி தலைமை ஆசிரியர் சா .சு சரிதாஉதவி தலைமை ஆசிரியர் மு.பரமசிவம்  மற்றும் ஆசிரியைகள் உள்பட பலர்  கலந்து கொண்டனர்.   

Top