logo
சட்டமன்ற தேர்தல்: புதுக்கோட்டை மாவட்டத்துக்கான பொது, செலவினம், காவல் பார்வையாளர்கள் நியமனம்

சட்டமன்ற தேர்தல்: புதுக்கோட்டை மாவட்டத்துக்கான பொது, செலவினம், காவல் பார்வையாளர்கள் நியமனம்

20/Mar/2021 08:29:21

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்துக்கான பொது, செலவினம் மற்றும் காவல் பார்வையாளர்களை  தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும் 6.4.2021 அன்று நடைபெற உள்ளது. இதை யொட்டி  கடந்த 26.02.2021 பிற்பகலில் இருந்து  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரையில் 178 கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி(தனி) மற்றும் 179 விராலிமலை சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக ஜி.ரகு , தேர்தல் செலவின பார்வையாளராக பி.கே. மண்டல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் 181 திருமயம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக     கே.எம்.கோவிந்த ராஜ், தேர்தல் செலவின பார்வையாளராக  தினேஷ் குமார் மீனா, 182 ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் 183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக அனிமேஷ் தாஸ் , தேர்தல் செலவின பார்வையாளராக கார்னி டான்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேர்தல் காவல் பார்வையாளராக மட்டா ரவி கிரண் நியமிக்கப்பட்டுள்ளார்.

லைபேசி எண்கள்,மின்னஞ்சல் முகவரி விவரம்: 

ஜி.ரகு - கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி (தனி),  விராலிமலை சட்டமன்ற தொகுதி- 9442937961 / 178and179genobs@gmail.com .

கே.எம்.கோவிந்த ராஜ்- புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, திருமயம் சட்டமன்ற தொகுதி-9442937962 / 180and181genobs@gmail.com.

அனிமேஷ் தாஸ்- ஆலங்குடி சட்டமன்ற தொகுதி , அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி-9080081469 9442937963 -182and183genobs@gmail.com .

தேர்தல் செலவின பார்வையாளர்கள்:

பி.கே. மண்டல் - கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி (தனி),விராலிமலை சட்டமன்ற தொகுதி-8300284417 / 178and179expobs@gmail.com .

தினேஷ் குமார்மீனா- புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, திருமயம் சட்டமன்ற தொகுதி -8300286191 / 180and181expobs@gmail.com .

கார்னிடான்-  ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி -8300286579 . 

182and183expobs@gmail.com. 

தேர்தல் காவல் பார்வையாளர்:

மட்டா ரவி கிரண்-  கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி (தனி), விராலிமலை சட்டமன்ற தொகுதி,  புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி,  திருமயம் சட்டமன்ற தொகுதி,  ஆலங்குடி சட்டமன்ற தொகுதி,  அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி-9467800678 /pdkpoliceobserver@ gmail.com .

பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிகள் மீறல்கள் தொடர்பான  புகார்களை மேற்காணும் எண்களில்  தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.


Top