logo
சாலை பாதுகாப்பு மாதம்: விபத்தில்லாமல் வாகனம் இயக்கிய ஓட்டுனர்களுக்கு விருது வழங்கும் விழா

சாலை பாதுகாப்பு மாதம்: விபத்தில்லாமல் வாகனம் இயக்கிய ஓட்டுனர்களுக்கு விருது வழங்கும் விழா

13/Feb/2021 05:03:21

புதுக்கோட்டை, பிப்: அரசு போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டலம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் புதுக்கோட்டை இணைந்து நடத்தும் சாலை பாதுகாப்பு மாதம்  2021 -ஐ முன்னிட்டு பதினோரு ஆண்டு முதல் விபத்தில்லாமல் அரசுப் பேருந்தை இயக்கிய 22 ஓட்டுனர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கும்  விழா நடைபெற்றது.


புதுக்கோட்டை மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு பொது மேலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் க.பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  11  ஆண்டிலிருந்து விபத்தில்லாமல் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார்.

 முன்னதாக வருகை தந்த அனைவரையும் உதவி மேலாளர் எஸ்.தங்கபாண்டியன் வரவேற்றார் நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.கே.ஜெய்தேவ்ராஜ், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தலைவர் மாருதி கண.மோகன்ராஜ், துணைத் தலைவர் ஏஎம்எஸ்..இப்ராகிம் பாபு, ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  விழாவில் பிரம்மகுமாரிகள் என்.லட்சுமி கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிப் பேசினார் .


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் சார்பாக   விபத்தில்லாமல் அரசு பேருந்தை  21ஆண்டாக இயக்கிய ஓட்டுனர் நடராஜன், 18ஆண்டாக ஸ்டீபன் பிலோமின்ராஜ், 16ஆண்டாக மோகன், 14ஆண்டாக பாலசுப்பிரமணியன், கண்ணன்,  13ஆண்டாக சேதுராமன், 12 ஆண்டாக காளியப்பன், ராதாகிருஷ்ணன், ரங்கசாமி, சாமிநாதன், மாறன், துளசிதாஸ், பதினோரு ஆண்டாக காளிதாஸ், செல்வராஜ், சுந்தர்ராஜ், செபஸ்டியன், செல்லப்பன், தெட்சிணாமூர்த்தி, நவநீத கிருஷ்ணன், நெப்போலியன், பச்சைமுத்து, பூபதி ஆகியோருக்கு விருது, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது .


விழாவில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்புசாமி, தங்கராஜ், செயலாளர் ஆரோக்கியசாமி, பொருளாளர் பிரசாத், அண்ண தொழில்சங்க பொதுச்செயலாளர் செபஸ்தியன், தொமுச பொதுச் செயலாளர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 நிகழ்ச்சியில் ராஜா முஹம்மது, முஹம்மது மன்சூர், சரவணன், ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் வருகை தந்த அனைவருக்கும் மரம் அறக்கட்டளை சார்பாக நிறுவனர் மரம் ராஜா மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்வில் முன்னதாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றிய இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நிறைவாக துணை மேலாளர் எம்.சுப்பு நன்றி கூறினார்

Top