15/Mar/2021 05:36:40
ஈரோடு மார்ச்: 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியின் மேற்கு தொகுதி வேட்பாளர் கே.வி..ராமலிங்கம் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலானது வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் கடந்த மார்ச் 12 முதல் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ள கே.வி.ராமலிங்கம் தனது வேட்புமனுவை மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் சைபுதினிடம் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்வில், ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ. கே.எஸ்.தென்னரசு உடனிருந்தார். அதிமுக வேட்பாளரான கே.வி. ராமலிங்கம் கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பதும் தற்போது மூன்றாவது முறையாக இதே தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.