logo
வரதட்சணை புகாரில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

வரதட்சணை புகாரில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

15/Mar/2021 01:38:27

புதுக்கோட்டை, மார்ச்:  வரதச்சணை கொடுமை தொடர்பாக கணவர் மீது அளித்த  புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பெண் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை  சேர்ந்த அன்பரசி என்பவரை அவரது  கணவர் பரமசிவம் மற்றும் அவரது குடும்பதினர் வரதட்சணை கேட்டு  கடந்த 5 ஆண்டுகளாக கொடுமை செய்து வந்தனராம். இவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கறம்பக்குடி காவல் நிலையத்திலும் மற்றும்புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும்  பலமுறை அன்பரசி மனு அளித்துள்ளார்.

ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து  திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க அன்பரசி வந்துள்ளார். அப்போது,  அவர்  கொண்டு வந்திருந்த  மண்ணெண்ணெயை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக திருக்கோகர்ணம்  காவல்துறையினர் அன்பரசியிடம்  விசாரணை செய்தனர். இதையடுத்து  மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அன்பரசியை  வரவழைத்து அவருடைய கோரிக்கை  குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் முன்னே பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Top