25/Oct/2020 05:08:12
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் பாலச்சந்தர்(37). இவர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவருக்கு தஞ்சையில் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை பாலச்சந்தர் தனது வீட்டுக்கு அருகேயுள்ள தோட்டத்தில் இருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள்களால் அவரை வெட்டிவிட்டுத் தப்பியோடினர். அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிய பாலச்சந்தரை மருத்துவமனைக்குக் கொண்ட செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது பிரேதம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த மாத்தூர் போலீஸார் உறவினர்களுடன் பேச்சு நடத்தி பாலசந்தரின் பிரேதத்தை உடற்கூராய்வுக்கு மருத்துமனைக்கு எடுத்துச் சென்றனர். கொலையாளிக ளைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்