logo
சென்னிமலை முருகன் கோயிலுக்கு தானமாக வந்த மாடுகளை பூசாரிகளுக்கு வழங்கக் கோரிக்கை

சென்னிமலை முருகன் கோயிலுக்கு தானமாக வந்த மாடுகளை பூசாரிகளுக்கு வழங்கக் கோரிக்கை

27/Sep/2020 06:14:54

 ஈரோடு மாவட்ட அருள்மிகு சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தானமாக வரப்பட்ட மாடுகளை மற்றும் கோவை இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள கோயில்களுக்கு தானமாக வந்த மாடுகளை  பூசாரிகளுக்கு வழங்க வேண்டுமென  பூசாரிகள்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இது குறித்துகோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு பூசாரிகள் நலச்சங்க மாநிலத்தலைவரும் ஓய்வூதிய தேர்வுக்குழு உறுப்பினருமான பி. வாசு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

தானத்தில் சிறந்த தானம் கோ தானம் என்ற நம்பிக்கையோடு பக்தர்கள் திருக்கோயில்களுக்கு மாடுகளை தானமாக வழங்கி வருகின்றனர்அந்த மாடுகள் திருக்கோயில் பயன்பாட்டுக்கு போக மீதம் உள்ள மாடுகளை இறைவன் திருமேனி தொட்டு பூஜை செய்யும் பூசாரிகளுக்கு விலை இல்லாமல் வழங்க அரசும், நீதி மன்றமும் கடந்த 2013 -ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்து, அந்த அரசு ஆணைப்படி கோவை மண்டலத்தில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஒருமுறைதான் பூசாரிகளுக்கு மாடுகள் வாங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிறகு தானமாக வரும் மாடுகளை பூசாரிகளுக்கு வழங்கப்பட்டதாக தெரியவில்லை. தற்போது, ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் சென்னிமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தானமாக வந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட மாடுகள் இருப்பதாக தெரியவருகிறது. திருக்கோயில் பயன்பாட்டுக்குபோக மீதம் உள்ள மாடுகளை மாத ஊதியம் இல்லாமல், வறுமை ஒன்றையே வருமானமாகக் கொண்டு வாழ்ந்து வரும் திருக்கோயிலில் பணியாற்றும் பூசாரிகளுக்கும், பூசாரிகள் நலவாரிய உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து விலை இல்லாமல் மாடுகளை பராமரிக்க வழங்க வேண்டும். மேலும் கோவை இணை ஆணையர் மண்டலத்தில், உட்பட்ட ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பட்டியலில் சேர்ந்த திருக்கோவிலுக்கு தானமாக மாடுகள் வந்துள்ளதாக தெரிய வருகிறது, இந்த மாடுகளை கோவை மண்டலத்தில் உள்ள பூசாரிகளுக்கு வழங்க நடவடிக்கை வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

Top