logo
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவின் முதல் கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

14/Mar/2021 09:49:53

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை   பாஜகவில் இணைந்த மருத்துவர் சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார்.


அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின்தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் திமுக வேட்பாளரை நேரடியாக எதிர்கொள்கிறார். கோவை தெற்கு தொகுதியில் - வானதி சீனிவாசன், அரவக்குறிச்சியில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தியும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு வேட்பாளராக அறிவிக்கப்பட் டுள்ளார். திமுகவிலிருந்து விலகி ஞாயிற்றுக்கிழமை  முற்பகலில்  பாஜகவில் இணைந்த மருத்துவர் சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், மொடக்குறிச்சி - சி.கே.சரஸ்வதி, திருக்கோவிலூர் - கலிவரதன், திருவண்ணாமலை - தணிகை வேல், குளச்சல் - பி.ரமேஷ், ராமநாதபுரம் - டி.குப்புராமு, திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன், துறைமுகம் - வினோத் பி.செல்வம், விருதுநகர் - ஜி.பாண்டுரங்கன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 கோவை தெற்கு தொகுதியில் பாஜக மகளிர் அணியின் வானதி சீனிவாசன் நேரடியாக கமல்ஹாசனை எதிர்கொள்கிறார்.


Top