logo
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும்: திமுக வேட்பாளர் சு.முத்துசாமி வாக்குறுதி

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும்: திமுக வேட்பாளர் சு.முத்துசாமி வாக்குறுதி

23/Mar/2021 09:40:31

 ஈரோடு, மார்ச்:  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி அளிக்கப்படும் என திமுக வேட்பாளர் சு.முத்துசாமி வாக்குறுதி அளித்தார்.

ஈரோடு மேற்கு சட்டசபை தொகுதி திமுக  வேட்பாளர் சு.முத்துசாமி  சூரம்பட்டி பஸ் ஸ்டாப், காந்திஜி சாலை, ஸ்டாலின் வீதி, திரு.வி.க., வீதி, ஜீவா வீதி, அண்ணா வீதி உட்பட பல்வேறு பகுதி வீடு, வீடாக சென்று  வாக்கு சேகரித்து மேலும் அவர் பேசியதாவது:

ஈரோடு மேற்கு தொகுதி, மாநகர ஒட்டிய சிறிய சிறிய நகரம் மற்றும் கிராமம் சார்ந்த பகுதி. இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பட திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். குறிப்பாக, தொழில் முனைவோர்களை உருவாக்கி அவர்களை ஊக்கப்படுத்த, அவர்களுக்கு வங்கி மானிய கடனுடன், அரசின் சலுகைகள் பெற்றுத்தரப்படும்.

 மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுக்கு தயாராகும் வகையில், அனைத்து பகுதியிலும் சிறிய படிப்பகம், மையங்கள் அமைத்து, தரமான புத்தகங்கள் வைக்கப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில் நெறிகாட்டி மையங்கள் மூலம், அப்பகுதியினர் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்பு, சுய தொழிலுக்கு வழி செய்யப்படும்.தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, அந்தந்த பகுதியில் உள்ள நிறுவனங்களில் வாய்ப்பு பெற்றுத்தர முயற்சி மேற்கொள்வேன்.

 ஓய்வூதியம் பெறும் முதியோர்களின் உதவித்தொகையை உயர்த்தி பெறவும், இதுவரை ஓய்வூதியம் கிடைக்காத தகுதியானவர்களுக்கு ஆணை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுப்போம்.ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் தரமாக கிடைக்க நடவடிக்கை எடுப்போம். சுகாதாரம் மேம்பட, பொது கழிப்பறைகள் முறையாக பராமரிக்கவும், தேவையான இடங்களில் பொது கழிப்பறை அமைக்கவும் முயல்வோம்.

திமுக ஆட்சி அமைத்த, 100 நாட்களுக்குள் மக்களுக்கு தேவையான திட்டங்கள், கோரிக்கை கள், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். எனவே, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை யில் ஆட்சி அமைய அனைவரும்  திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் அவர்.பின்னர், பாரிவள்ளல் வீதி, பாரதி வீதி, திருவள்ளுவர் வீதி, நேதாஜி வீதி என பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து, வாக்காளர்களை சந்தித்து வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார்.

Top