logo
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி:அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி:அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

08/Nov/2020 05:48:33

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபி அருகில் உள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் 583 பேருக்கு தீபாவளி போனஸ் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.7,77,720-ஐ தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

இந்த ஆண்டு 2505 பள்ளிகளுக்கு அனுமதி நீட்டிற்பிற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது. குடிமராமத்து பணிகள் மூலம் நல்ல பெய்ததால் நீர் நிலைகள் நிரம்பி உள்ளது. மேலும் வெள்ளச்சேதமும் குறைவாக உள்ளது பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோரின் கருத்து கேட்பு கூட்டத்திற்கு பெற்றோர் பாதுகாப்பாக வர வேண்டும். நூலகங்களின் நேரத்தை காலநீட்டிப்பு செய்வது குறித்து முதல் அமைச்சரிடம் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது என்றா  அமைச்சர் செங்கோட்டையன்.

நிகழ்ச்சிகளில் ஆவின் தலைவர் காளியப்பன், கோபி ஆர்.டி.ஓ.ஜெயராமன், தாசில்தார்கள் தியாகராஜன், வெங்கடேஷ், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம், தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் மௌதீஸ்வரன், சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா, சங்க தலைவர்சாமிநாதன், செயலாளர் சிவசாமி, அளுக்குளி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதிபாண்டுரங்கன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 


Top