logo
பத்திரிகை மற்றும் ஊடவியலாளர் சங்கத்தினருடன் செய்தித்துறை அமைச்சர்  ஆலோசனை

பத்திரிகை மற்றும் ஊடவியலாளர் சங்கத்தினருடன் செய்தித்துறை அமைச்சர் ஆலோசனை

15/Jun/2021 10:50:53

சென்னை: பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர் சங்கம் உள்பட 7 சங்கங்களுடன் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கம், சென்னை பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம், தமிழ்நாடு பத்திரிகை வெளியீட்டாளர் சங்கம், சென்னை பிரஸ் கிளப், மாற்றத்துக்கான ஊடகவியலாளர் சங்கம், தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கம் ஆகியசங்கங்களின்  சார்பில் ஒவ்வொரு சங்கத்திலிருந்தும் தலா  3 தலைமை நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு  சங்கத்தினருடன் தனித்தனியே ஆலோசனை நடத்தப்பட்டது

இது தொடர்பாக  தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க தலைவர் பிரபுதாஸன் வெளியிட்ட தகவல்:

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த ஆலோசனையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செய்தித்துறை இயக்குநர், துணை இயக்குனர், இணை இயக்குநர்கள் உள்ளிட்ட 7 பேர்  பங்கேற்ற ஆலோசனை  கூட்டத்தில்

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் கையேடு அமைச்சரிடமும்  தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் (385 பேர்) அடங்கிய பட்டியல் அதிகாரிகளிடமும் வழங்கப்பட்டது.

தமிழ் செய்திவாசிப்பாளர்கள் சங்கம் சார்பில் அமைச்சரிடம்  பின்வரும் விஷயங்கள் பேசப்பட்டன:

கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் அறிவித்த உதவித் தொகை மற்றும் நிவாரணம் அரசு அங்கீகார அட்டை இல்லாத, செய்தி நிறுவனங்கள் அளிக்கும் அடையாள அட்டையை அடிப்படையாக கொண்டு வழங்கவேண்டும் .

அரசு அங்கீகார அட்டை ஒரு சேனல் மற்றும் பத்திரிகைக்கு தலா 11 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்றும், அதை தலைமை செய்தி ஆசிரியர், தலைமை செய்தியாளர், தலைமை ஒளிப்பதிவாளர் மற்றும் தலைமைச் செயலகம் செல்லும் மூத்த ஊடகவியலாளர்கள் மட்டுமே வைத்திருக்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கிடையே கடந்த ஓராண்டாக அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், செய்தி வாசிப்பாளர்கள், சப் எடிட்டர்கள், விசுவல் எடிட்டர்கள், கேமராமேன், செய்தி தயாரிப்பாளர்கள், வாகன ஓட்டுநர்கள் என ஒவ்வொரு செய்தியும் வெளிவர காரணமாக உழைத்த எவருக்கும் முதல்வர் அறிவித்த நிவாரணமும், உதவித்தொகையும் கிடைக்காத நிலை உள்ளதையும்,

மீடியாவில் பணியாற்றும் பெரும்பாலானோர்  ரூ. 20ஆயிரத்துக்கும் குறைவான  ஊதியமே  பெறுகிறார்கள், கடந்த ஓராண்டாக அலுவலகம் சென்று வருவதால்  அவர்களது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ப்ட்டு, தாய், தந்தை என  பல உயிர்கள் பறிபோனதையும் அமைச்சரிடம் தெரிவித்தோம்.

தமிழ்நாட்டில் 25 சேனல்கள் மட்டுமே உள்ளன. மொத்தம் 3000 பேர் மட்டுமே இருப்பதையும், அதேபோல, பிரின்ட் மீடியா, மாத, வாராந்திர பத்திரிகை மற்றும் மாவட்ட செய்தியாளர்கள் என எப்படி வைத்துக்கொண்டாலும் 10ஆயிரம் பேர் கூட  இருக்கமாட்டார்கள். எனவே, கொரோனா நிவாரணத் தொகயை  அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும்

அரசின் நிவாரணம் மற்றும் உதவிப் பொருட்களை ஏதோ ஒரு அமைப்பிடம் மட்டுமே வழங்குவதை தவிர்த்து, அனைத்து சங்கங்களின் குழு ஒன்றை அமைத்து பிரித்து வழங்க வேண்டும் என்றும் சென்னை பெருவெள்ளம், கஜாபுயல், பள்ளிக்கு 1000 புத்தகங்கள் வழங்கியது, நலத்திட்ட உதவிகள், ஊடகவியலாளர்களுக்கு உதவிகள், கொரோனா தடுப்பூசி முகாம் உள்பட கடந்த 5 ஆண்டுகளில்  செய்த நலத்திட்ட பணிகளை பட்டியலிட்டோம்.

பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வரும் தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கத்திற்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கி, கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி பத்திரிகை நலவாரியம் அமைப்பதற்கு பதில் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் பத்திரிகை நல ஆணையம் அமைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

ந்த அரசு வந்தாலும் பத்திரிகை துறையை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது இயல்பாக உள்ளது. நாங்கள் நேர்மையாக இருக்க விரும்புகிறோம். ஆதலால், பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வரும் வாகனங்களை முறையாக சோதனை செய்யவேண்டும் என்றும், அரசு சார்பில் பயோமெட்ரிக் முறையில் பிரிண்ட் செய்து பிரஸ் ஸ்டிக்கர் வழங்க வேண்டும் என்றும், காவல்துறையினர் ஆப் மூலம் பயோமெட்ரிக் முறையில் சோதனை செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளையும் தெரிவித்தோம்.

பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கி தரவேண்டும் என்றும், குறைந்த விலையில் நிலம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு மெடிகிளைம் பாலிசி அரசு சார்பில் வழங்க வேண்டும் என்றும்  மீடியாவில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் 50 வயதை தாண்டினாலே பெரிய விஷயம், பலர்  இரத்த அழுத்தம், மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாகவும்  அமைச்சரிடம் கூறினோம். ஆதலால், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் அண்டைய மாநில ஆந்திர அரசு செய்திருப்பது போல, தமிழ்நாடு அரசு சார்பில் மெடிகிளைம் பாலிசி எடுத்துத்  தரவேண்டும் என்று வலியுறுத்தினோம்

 தமிழ்நாடு அரசு சார்பில் படிவம் அச்சிடப்பட்டு, செய்தி நிறுவனங்களின் பரிந்துரை கடிதம், அடையாள அட்டை கொண்டு பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அரசே அடையாள அட்டை வழங்கி அங்கீகரிக்க வேண்டும் என்றும்

ஆர்.என். -யில் பதிவு செய்துவிட்டு, அரசு அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் மிரட்டுவதற்காகவே பத்திரிகை மற்றும் வெப்சைட் நடத்தும் போலிகளை கண்டறிய வேண்டும் என்றும், வெறும் 50 பத்திரிகை மட்டும் அச்சிட்டு தலைமைச் செயலகத்தில் கொடுத்துவிட்டு பத்திரிகையாளர் போர்வையில் பல சலுகைகளை பெற்றுவரும் போலி பத்திரிகையாளர் களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

குறைந்தது ஒரு பத்திரிகைக்கு 20 பேர் பணியாற்ற வேண்டும், அவர்களுக்கு  ஊதியம்இஎஸ்ஐ, பி.எப் உள்ளிட்ட பாதுகாப்பு  வழங்கப்படுவதை உறுதி செய்த பின்னரே அதை ஒரு பத்திரிகையாக அங்கீகரிக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.

மேலும் பல விஷயங்களை ஆதாரங்களுடன், ஆவணங்களுடன், அழுத்தமாக தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் எடுத்து கூறியிருக்கிறது. சுமார் 20 நிமிடங்கள் அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்  நிறைவில்  புதிதாக அமைந்துள்ள அரசு, பத்திரிகை மற்றும் ஊடகத்துறையையும் சீர்படுத்த வேண்டும் என்று ஒரே வார்த்தையில்  தெரிவித்தாகவும்  தெரிவித்தார்.

 

Top