logo
அதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: தமாகா இன்று அவசர ஆலோசனை

அதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி: தமாகா இன்று அவசர ஆலோசனை

11/Mar/2021 10:22:21

சென்னை: அதிமுகவுடனான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி உச்சகட்டத்தில் நீடிப்பதால்  அடுத்த கட்ட  அரசியல் நகர்வு  குறித்து முடிவெடுவதற்காக மாநில நிா்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வியாழக்கிழமை  ஏற்பாடுசெய்துள்ளார்.

அதிமுகவிடம் ,அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தமாகா தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. இதுவரை 4 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடந்துள்ளன.

தமாகாவுக்கு 3 தொகுதிகள் வரை தர அதிமுக முன்வந்துள்ளது. ஆனால், 6 தொகுதிகள் வரையேனும் தரவேண்டும் என்பதில் தமாகா உறுதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக வேட்பாளா் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதனால், ஜி.கே.வாசன் அடுத்தகட்ட முடிவு எடுப்பதற்காக மாநில நிா்வாகிகளின் அவசரக்கூட்டத்தை வியாழக்கிழமை கூட்டியுள்ளாா். அதிமுக இன்னும் 14 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கிறது.

இதில் தமாகாவுக்கு தொகுதிகள் ஒதுக்கினால் அதை ஏற்றுக்கொண்டு அதிமுக கூட்டணியி லேயே தொடரலாமா அல்லது வேறு கூட்டணிக்குச் செல்லலாமா என்பது குறித்து நிா்வாகி களுடன் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Top