logo
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்

18/Mar/2021 05:35:57

புதுக்கோட்டை, மார்ச்: திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கும் தேர்தல் பிரசாரக்கூட்டம்  இன்று இரவு 7 மணிக்கு  புதுக்கோட்டையில்  நடைபெறுகிறது.

இது குறித்து,  தெற்கு மாவட்ட பொருப்பாளர் எஸ்.ரகுபதி எம்எல்ஏ, வடக்கு மாவட்ட பொருப்பாளர் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை  மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருமயம் தொகுயில் எஸ்.ரகுபதி எம்எல்ஏ,  ஆலங்குடி தொகுதியில் சிவ.வீ.மெய்யநாதன்எம்எல்ஏ,  புதுக்கோட்டை தொகுதியில் டாக்டர் வை.முத்துராஜா, விராலிமலை  தொகுதியில் தென்னலூர் எம்.பழனியப்பன் ஆகியோர்  வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு உதயசூரியன்  சின்னத்திலும்.


 அறந்தாங்கி  தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ்  கட்சி வேட்பாளர் எஸ்.டி.ராமச்சந்திர னுக்கு  கை சின்னத்திற்கும், கந்தர்வகோட்டை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்  எம்.சின்னத்துரைக்கு அரிவாள் சுத்தியல்  சின்னத் திற்கும்  வாக்கு சேகரித்து  புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் திடலில்  இன்று (வியாழன்) இரவு 7 மணி அளவில் நடைபெறும் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இக்கூட்டத்தில்  திமுக  நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரளாகக்  கலந்துகொண்டு சிறப்பிக் வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Top