logo
100 சதவீதம் வாக்காளிப்பதை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளின் வாகன விழிப்புணர்வு பேரணி

100 சதவீதம் வாக்காளிப்பதை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளின் வாகன விழிப்புணர்வு பேரணி

09/Mar/2021 07:32:33

புதுக்கோட்டை, மார்ச்: வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற  வாகன  விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது..

 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில்  நடைபெற்ற மாற்றுத்திறனாளி கள் பங்கேற்ற வாகன விழிப்புணர்வு  பேரணியை   மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பி. உமாமமேஸ்வரி கொடியசைத்து தொடங்கி  வைத்தார்.

இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.வெ. சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

 


Top