logo
வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி 1950  எண்ணில் அறிந்து கொள்ளலாம்- ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி 1950 எண்ணில் அறிந்து கொள்ளலாம்- ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

09/Mar/2021 10:23:17

புதுக்கோட்டை, மார்ச்:வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி 1950  எண்ணிலும்தேர்தல் நடத்தை விதிகள் மீறல் மற்றும்  இதர தேர்தல் தொடர்பான புகார்களை 1800 4252 735 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


 இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: 2021 தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் எதிர்வரும்  6.04.2021 அன்று நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் 26.02.2021 பிற்பகலில்  அமலுக்கு வந்தது.  

அதனை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில்  உள்ள   6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தொகுதிவாரியாக தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிற குழுக்களுக்கு தனித்தனியாக வாகன வசதியும், ஒரு நிர்வாக நடுவர் தலைமையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர்,  2 காவலர்கள் மற்றும் ஒரு வீடியோ கிராபர் உள்ளடக்கிய குழுக்கள் செயல்படுகிறது.


178 கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படை-3.நிலையான கண்காணிப்புக் குழு-3.வீடியோ கண்காணிப்புக் குழு-1 உள்பட மொத்தம்-7குழுக்கள்.

179 விராலிமலை  சட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படை-3. நிலையான கண்காணிப்புக் குழு- 3. வீடியோ கண்காணிப்புக் குழு- 1 உள்பட மொத்தம்  7 குழுக்கள்.

180 புதுக்கோட்டைசட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படை-3 . நிலையான கண்காணிப்புக் குழு- 3.  வீடியோ கண்காணிப்புக் குழு- 1 உள்பட மொத்தம் 7 குழுக்கள்.

  181 திருமயம் சட்டமன்றத் தொகுதியில் பறக்கும் படை- 3. நிலையான கண்காணிப்புக் குழு- 3. வீடியோ கண்காணிப்புக்குழு-1 உள்பட மொத்தம் - 7 குழுக்கள்.

182 ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படை-3 நிலையான கண்காணிப்புக்குழு-3. வீடியோ கண்காணிப்புக்குழு -1 உள்பட மொத்தம் 7 குழுக்கள். 

183 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் பறக்குபடை-3. நிலையான கண்காணிப்புக்குழு- 3. வீடியோ கண்காணிப்புக்குழு-1 உள்பட  7 குழுக்கள் என  6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 18 பறக்கும்படை, 18 நிலையான கண்காணிப்புக்குழு, 6 வீடியோ கண்காணிப்புக்குழு உள்பட  மொத்தம் 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இந்தக்  குழுக்களின் மூலமாக தினந்தோறும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் இருப்பின் கண்காணிக்கவும், பணம் மற்றும் மதுபானம் கடத்தல் போன்றவற்றை தடுக்கவும், தேர்தல் செலவினங்களை கண்காணிக்கவும் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் மீறல் மற்றும்  இதர தேர்தல் தொடர்பான புகார்கள் அளிக்க 1800 4252 735 எனும் கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் பட்டியல் குறித்த விபரங்கள் அறிய  1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையின் மூலம் வாக்காளர்கள்ள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை குறித்து விவரங்கள் கேட்டறிந்து பயனடையலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் உள்ள 1,902 வாக்குசாவடிகளில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் (சாய்தளம், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை) உறுதிபடுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்ச அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ள  வாக்கு சாவடிகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அவற்றை  உடனடியாக கண்டறிந்து போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிட  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கிணங்க மாவட்டம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு   குறித்த  விளம்பரங்கள், பேரணிகள், மனித சங்கிலிகள், ஊர்வலங்கள், மாரத்தான் ஓட்டம்,  துண்டு பிரசுரங்கள்  மற்றும் கையெழுத்து இயக்கம்  ஆகியவற்றின் மூலம்  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

Top