logo
ஈரோடு மாவட்டத்தில் வங்கிகளில் ரூ .10 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனையை தீவிரமாக கண்காணிக்கும் தேர்தல் அலுவலர்கள்

ஈரோடு மாவட்டத்தில் வங்கிகளில் ரூ .10 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனையை தீவிரமாக கண்காணிக்கும் தேர்தல் அலுவலர்கள்

07/Mar/2021 06:49:14

ஈரோடு, மார்ச்: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்  6- ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், துணை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

தேர்தல் நடத்தை விதிகளளை மீறி வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வினியோகம் ஆகியவற்றை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் ,நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் ஷிப்டு முறையில் பணியாற்றி வருகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ரூ 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அதற்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும் .அப்படி இல்லை என்றால் அந்த பணம்  பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


 இதையடுத்து பறக்கும் படையினர் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து ரூ .50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் தொழிலதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  ரூ .10 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை நடைபெற்றால் அவற்றை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இது சம்பந்தமாக  ஈரோட்டில் நடந்த வங்கி மேலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  வங்கியில் யார் பெயரில் பண பரிவர்த்தனை  நடைபெறும்  விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பண பரிவர்த்தனை குறித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ரூ 10 லட்சத்துக்கும் மேல் பண பரிவர்த்தனை செய்யும்  நபர்கள் குறித்து தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Top