25/Nov/2020 06:03:50
புதுக்கோட்டை: இதுகுறித்து புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் வை.முத்துராஜா வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க நிவர் புயலால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை அளிக்க மாவட்ட திமுக மருத்துவரணி தீர்மானித்துள்ளது.
இன்று இரவில் கரையைக்( 25 / 11 /2020) கடக்கக்கூடிய நிவர் புயலால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்பட்ட பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால், உடனடியாக 04322 225522 - 7373085000 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுக்கோட்டையில் அமைந்துள்ள டாக்டர் முத்துராஜாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 24 மணி நேரமும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். எனவே, நிவர் புயலலால் உடல் நலப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையை அணுகி இலவச மருத்துவ சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.