logo
புதுக்கோட்டை  நகராட்சி பகுதியில் துணை அஞ்சல் அலுவலகங்களின் வேலை நேரம் மாற்றம்

புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் துணை அஞ்சல் அலுவலகங்களின் வேலை நேரம் மாற்றம்

03/Feb/2021 08:36:20

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை அஞ்சலக கோட்டத்தில், புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட துணை அஞ்சலகங்களின்  வேலை நேரம் காலை 11முதல் இரவு 7 மணி வரை  மாற்றப்பட்டுள்ளது.

 

இது குறித்து புதுக்கோட்டை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்த தகவல்:

புதுக்கோட்டை புவனேஸ்வரி நகர்,  புதுக்கோட்டை கிழக்கு , புதுக்கோட்டை பொதுஅலுவலகம், மச்சுவாடி, பிள்ளைதண்ணீர் பந்தல் ஆகிய துணை அஞ்சலகங்களின் வேலை நேரம் காலை 11 முதல் இரவு 7மணிவரை இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படுகிறது. இந்த மாற்றம் (01.02.2021) திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது. வேலை நேரத்தின் மாற்றத்தின் மூலமாக பொது மக்கள் அஞ்சலக சேவைகளை இரவு 7 மணிவரை பயன்படுத்திக் கொள்ள இயலும். இந்த அஞ்சலகங்களின் மூலமாக  மாலை 6மணிவரை பதிவு தபால் மற்றும் விரைவு தபால் அனுப்ப இயலும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Top