logo
தனியார் மயமாக்கல் கொள்கையைக் கண்டித்து மார்ச்.15, 16-இ்ல்  வங்கிகள் வேலை நிறுத்தம்

தனியார் மயமாக்கல் கொள்கையைக் கண்டித்து மார்ச்.15, 16-இ்ல் வங்கிகள் வேலை நிறுத்தம்

07/Mar/2021 06:01:22

ஈரோடு, மார்ச்: மத்திய அரசின் தனியார் மயமாக்கும் கொள்கையை கண்டித்து மார்ச் 15, 16 - தேதிகளில் அகில இந்திய அளவில் நடைபெறும் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று தங்களது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்க இருப்பதாக அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர், மத்திய அரசின் தனியார் மயமாக்கும் கொள்கையால் வங்கித்துறையின் சேவைகள் பாதிக்கப்பட்டு, சாமானிய மக்கள் விவசாய கடன், தொழில் கடன், கல்வி கடன், வீட்டுகடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தனர். நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் மக்கள் சேவை திட்டங்களும் பாதிக்கப்படுவதுடன், சேவைத்துறையாக உள்ள வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் ஈட்டும் துறையாக மாறும் .இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து  வரும் 15, 16 -தேதிகளில்  அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். போராட்டத்துக்கு 

  பொதுமக்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும், பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைய மத்திய அரசின் கொள்கைகளும் நடவடிக்கைகளுமே காரணம். இதனை மறைத்து  தனியார் முதலீடுகளை அனுமதிப்பது சரியானதல்ல எனவும் தெரிவித்தனர்.

Top