logo
சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்த 4266  மதுபாட்டில்கள்: ஈரோட்டில்  கழிநீர் கால்வாயில்  ஊற்றி அழித்த  மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார்.

சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்த 4266 மதுபாட்டில்கள்: ஈரோட்டில் கழிநீர் கால்வாயில் ஊற்றி அழித்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார்.

24/Jun/2021 09:35:32

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்துக்கு சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வந்த 4266  மதுபாட்டில்களை   மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் கழிநீர் கால்வாயில்  ஊற்றி அழித்தனர்.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தொற்று அதிகமுள்ள ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கபடவில்லை. இதனை பயன்படுத்தி சிலர் ரயில்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் கர்நாடக மற்றும் பாண்டிச்சேரி போன்ற மாவட்டங்களில் இருந்து  மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில்,ஈரோடு மதுவிலக்கிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாதத் தில் சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட வெளிமாநில மதுபாட்டில்கள் சுமார் 4266 மதுபாட்டில்களை உதவி கலால் அலுவலர் குமரேசன் தலைமையில் ஆய்வா ளர் ரமேஷ் உட்பட பலர் 1100 லிட்டர் மதுவை சாக்கடையில் ஊற்றி அழித்தனர்.  ஈரோடு மதுவிலக்கு பிரிவில்  போடப்பட்ட  49 வழக்குகளில் 52 நபர்கள் கைது செய்யப்பட்டுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Top