logo
தேர்தல் கண்காணிப்பு பணி: புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது

தேர்தல் கண்காணிப்பு பணி: புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது

06/Mar/2021 05:44:28

புதுக்கோட்டை, மாரச்:  தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் 36  வாகனங்களுக்கு ஜிபிஎஸ்  கருவி பொருத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர், தேரதல் நடத்தும் அலுவலர் பி.உமாமகேஸ்வரி  பாரிவையிட்டு ஆய்வு செய்தார்.

சட்டப்பேரவை பொதுத் தோ;தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ;தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணியினை 6.3.2021-இல்  நேரில்ல் பார்வையிட்டு ஆய்வு செய்தபின்னர்கூறியதாவது:

 ஏப்ரல் 6-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி,   புதுக்கோட்டை மாவட்டத்தில்  நேர்மையாக நடத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக   புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் 36 வாகனங்க ளுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை  தொகுதிகளிலும் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் போன்ற குழுவினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் 18 பறக்கும்படைகள் மற்றும் 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 36 வாகனங்களில் வாகனத்தின் இருப்பிடம் மற்றும் செயல்பாட்டை கண்டறியும்  வகையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் வாகனம் செல்லும் இடம் மற்றும் கண்காணிப்பு பணிகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. 

மேலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இதற்கென தனியாக  அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து  ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் செயல்பாடுகள் 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது தனி வட்டாட்சியர் (தேர்தல்) கலைமணி உள்பட பலர்  உடனிருந்தனர்.

Top