05/Mar/2021 07:18:25
புதுக்கோட்டை, மார்ச்: வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை கட்சியின் மாநில பொருளாளர் திருமதி பிரேமலதாவிஜயகாந்திடம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தேமுதிக பொருளாளர் கே.ஆர். ஞானம் அளித்தார்.
இந்நிகழ்வில். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலர் சுப்பிரமணியன், அவைத்தலைவர் துரைராஜ், ஒன்றிய செயலர்கள் செந்தில்குமார், சண. சண்முகம், கல்யாணசுந்தரம், துணைச்செயலர் முத்துக்குமார், இளைஞரணி துணைச்செயலர் இளையராஜா, மாவட்ட கேப்டன் மன்றசெயலர் ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.