logo
தேர்தல் மேலாண் திட்ட கையேடு தயாரிக்கும் பணியை  விரைந்து முடிக்க ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தல்

தேர்தல் மேலாண் திட்ட கையேடு தயாரிக்கும் பணியை விரைந்து முடிக்க ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவுறுத்தல்

06/Mar/2021 05:06:35

புதுக்கோட்டை, மார்ச்:  மாவட்ட தேர்தல் மேலாண்  திட்டம் தொடர்பான கையேடு, தேர்தல் தொடர்பான தொலைபேசி எண்கள்,அலுவலகங்கள் தொடர்பான விவரங்களை பெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தினார்.. 

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடந்த தேர்தல் பணி அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியதாவது:

 ஏப்.6-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொது தேர்தலை  இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின் படி புதுக்கோட்டை  மாவட்டத்தில் நேர்மையாக நடத்த  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேட்பாளா;கள் வேட்பு  மனு தாக்கலின் போது வேட்பு மனு பரிசீலனை, வேட்பு மனு ஏற்பு, வேட்பு மனு நிராகரிப்பு போன்ற பல்வேறு பணிகள் குறித்த விதிமுறைகளை  தேர்தல் அலுவலர்கள் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்

 மாவட்ட தோ;தல் மேலாண்மை திட்டம் தொடா;பான கையேடு, தேர்தல் தொடர்பான தொலைபேசி எண்கள் மற்றும் அலுவலகங்கள் தொடர்பான விவரங்களை பெறும் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பறக்கும்படை,  வீடியோ கண்காணிப்புக் குழு மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு போன்ற வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள 24 மணிநேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் ஜி.பி.எஸ். செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி தேர்தலை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி.உமாமகேஸ்வரி. 

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்  கலந்து கொண்டனர். 

Top