logo
 கந்தர்வகோட்டை தொகுதியில் 8 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்: எம்எல்ஏ சின்னத்துரை  தொடங்கி வைத்தார்.

கந்தர்வகோட்டை தொகுதியில் 8 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள்: எம்எல்ஏ சின்னத்துரை தொடங்கி வைத்தார்.

11/Jun/2021 06:25:26

புதுக்கோட்டை, ஜூன்:  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட 8 இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை  முயற்சியில்  நேரடி நெல்கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.

கந்தர்வகோட்டை தொகுதிக்குபட்பட்ட கறம்பக்குடி, பந்துவக்கோட்டை, தட்டாமனைப்பட்டி, பாப்பாபட்டி, கல்லுமடை, செங்கமேடு, வடக்க;ர், குளத்துநாயக்கர்பட்டு ஆகிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை முயற்சியில்  நேரடி நெல்கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த மையங்களை எம்எல்ஏ- .சின்னத்துரை தொடங்கி வைத்தார்.

இதில், கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், தழிழய்யா, சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் .அன்பழகன், வி.ரெத்தினவேல், திமுக நகரச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Top