logo
அங்கன்வாடி ஊழியர்கள்  தொடர்ந்து 4-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து 4-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

25/Feb/2021 09:10:58

ஈரோடு, பிப்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள்  தொடர்ந்து 4-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம். 

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ .5 லட்சம் வழங்க வேண்டும். பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 3 வருட பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 

10 வருட பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 22-ஆம் தேதி முதல் மாநில தழுவிய காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 

அதன்படி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் கடந்த 22-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். மாவட்டத்தில் இருந்து  500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். 


இந்நிலையில், அவர்களின் போராட்டம்வியாழக்கிழமை4-ஆவது நாளாக  தொடர்ந்து நீடித்து வருகிறது.பல்வேறு பகுதியில் இருந்தும் அங்கன்வாடி ஊழியர்கள்தாலுகா அலுவலகத்தில் திரண்டனர். அனைவருக்கும்  போராட்ட களத்திலேயே உணவு வழங்கப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைப் போன்று ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாகவு  ரூ.3 ஆயிரமாகவும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் உள்பட கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இரவு கடும் பணியை பொருட்படுத்தாமல் விடிய விடிய குடியேறும் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். வியாழக்கிழமை  3-ஆவது நாளாக நீடித்து வருகிறது. போராட்டகளத்திலேயே அனைவரும் சமைத்து சாப்பிட்டனர்.

Top