09/May/2021 08:53:42
ஈரோடு, மே: முழு பொது முடக்கம்: காய்கறி, மளிகை கடை பகல் 12 மணி வரை இயங்கும் உணவகங்களில் பார்சலில் வினியோகம்
தமிழகத்தில் கொரோனா தாக்கம் வேகம் எடுத்துள்ளது. ஒருநாள் பாதிப்பு 27 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு
வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் திங்கட்கிழமை(மே 10) முதல் வரும் 24 ஆம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி,
மளிகை, டீக்கடை, பகல் 12 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல் உணவகங்கள், அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். ஆனால் உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை. காலை 6 மணி முதல் 10 மணி வரையும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்சலில் மட்டும் உணவு வழங்கப்படும். பால், பெட்ரோல் பங்க் வழக்கம் போல் செயல்படும்.