logo
கிராம சபையைக் கூட்டி மக்களை ஏமாற்றி வருகிறார் மு.க. ஸ்டாலின் : பவானி பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கிராம சபையைக் கூட்டி மக்களை ஏமாற்றி வருகிறார் மு.க. ஸ்டாலின் : பவானி பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

06/Jan/2021 10:48:38

ஈரோடு, ஜன: வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரக் கூட்டங்களில் பேசி வருகிறார்.அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை  பவானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

 பவானி லட்சுமி நகரில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் தங்கமணி, ஆட்சியர் சி. கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே வி ராமலிங்கம், தோப்பு வெங்கடாச்சலம், தென்னரசு, சிவசுப்ரமணி, ராதாகிருஷ்ணன், ஈஸ்வரன் ஆகியோர் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

பவானி பொதுக்கூட்டத்தில் நான் பேசுவதை பெருமையாக கருதுகிறேன்.நான் படித்து வளர்ந்தது பவானி தொகுதியில் தான்.  வேளாண் மக்கள் நிறைந்த தொகுதியான இங்கு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.தண்ணீர் சேமிப்பை அதிகபடுத்த குடிமராமத்து பணிகள் மூலம் ஏரிகள் அனைத்தும் நிறைந்து காணப்படுகிறது.தூர்வாராமல் இருந்த நீர் நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டுள்ளது.

தண்ணீர் சேமிப்பில தமிழகம் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. 7 இடங்களில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை முதன்மையாக வழங்குவதை தமிழக அரசு கொண்டுள்ளது.மேட்டூர் கிழக்கு கரை வாய்க்கால் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்க காங்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது.அதே போல கீழ்பவானி கால்வாயில் கசிவு ஏற்படுவதை தடுக்க ரூ.640 கோடிமதிப்பீட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மக்கள் சபை கூட்டம் நடத்தும் ஸ்டாலின் மக்களுக்கு என்ன நன்மை செய்தார்:

 நாடாளுமன்ற தேர்தலின் போதும் இதே போல கூட்டம் நடத்தி மனுக்கள் வாங்கினர்.அதன் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.மக்கள் கொடுத்த மனுக்கள் எங்களிடம் ஒப்படைக்கவில்லை.பொய் பிரசாரம் மட்டுமே ஸ்டாலின் மேற்கொள்கிறார்.கவர்னரிடம் மனு கொடுத்ததாக கூறுகிறார்.அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கிறார்.நடக்காத டெண்டரில் ஊழல் செய்ததாக கூறுகிறார்.வேண்டுமென்று திட்டமிட்டு முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார்.

மக்களிடம் கவர்ச்சிகரமாக பேசி தவறான தகவல்களை பரப்புகிறார்:

முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி, பெரியருப்பன், அனிதாராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

அதிமுக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஸ்டாலின் கூறி வருகிறார்.டெண்டர் ஆன்லைன் மூலே தற்போது நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் பெட்டி வைத்து டெணடர் போடும் முறையே இருந்தது..அதில் யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.மக்களை குழப்பி அதில் அரசியல் செய்கிறார் ஸ்டாலின்.அவரது கனவு எப்போதும் பலிக்காது.கானல் நீராகவே இருக்கும்.

2-ஜி ஏலத்தில் முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது..அதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது..அந்த பணத்தில் 200 கோடி ரூபாய் கலைஞர் டிவிக்கு கைமாறியது..ஸடாலின் அதில் பங்குதாரராக இருக்கிறார்..இதனை மறைக்க அதிமுக மீது திட்டமிட்டு அரசியல் நாடகத்தை நடத்தி பொய் பிரசாரம் செய்கிறார்.

எம்ஜிஆர் ஜெயலலிதா நினைத்ததை எனது அரசு செய்து வருகிறது.

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்காக 2000அம்மா மினி கிளினிக் எனது அரசு அமைத்துள்ளது. தமிழக அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதில் ஸ்டாலின் குறைகூறி வருகிறார்.இதை மட்டுமே அவர் வாடிக்கையாக வைத்துள்ளார்..

அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்வி படிக்க 7.5% உள் இடஒதுக்கீடு செய்து கொடுத்து 318 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். பவானியில் உள்ள அரசு பள்ளியில் நான் படித்தவன்.அதன் காரணமாக ஏழை மாணவர்களின நிலை எனக்கு தெரியும்.

5 லட்சம் முதியோர்களுக்கு உதவி தொகை வழங்குவதாக அறிவித்து 90% பேருக்கு  அரசு வழங்கியுள்ளது.தமிழக அரசு எதும் செய்யவில்லை என ஸ்டாலின் கூறுகிறார்.நல்ல ஆட்சி கொடுத்ததால் தான் பல்வேறு விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது. கல்வி, உறுப்புமாற்று, அறுவைசிகிச்சை, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட துறைகளுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

திமுக கவர்ச்சிகரமான திட்டங்களை மட்டுமே அறிவிக்கும்.திமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு நிலம் வழங்குவதாக கூறினர். ஆனால் வழங்கவில்லை. குடும்ப அரசியல் மட்டுமே திமுகவில் நடைபெறுகிறது..ஸ்டாலின் தொடங்கி உதயநிதி. கனிமொழி. தயாநிதிமாறன் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

மக்களை ஏமாற்றி திமுக சொத்து சேர்த்துள்ளது.ஆட்சி அமைத்து மக்களுக்கு என்ன நன்மை செய்தீர்கள் உங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதும் செய்வதில்லை.அதிமுக ஆட்சி மட்டுமே மக்களுக்கான ஆட்சி மக்களே நீதிபதிகள் மக்களுக்கு தேவையான அனைத்தும் எங்கள் அரசே செய்து தரும்.ஈரோடு மாவட்டம் அதிமுக வின் கோட்டை..வரும் தேர்தலிலும் நமது அரசே அமைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

பவானி ஜமக்காள தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் பழனிச்சாமி உறுதி

 பவானியில் பிரசார  கூட்டத்தை முடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பவானியில் சிறு குறு தொழில் முனைவோர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவரிடம் சவுடு மண் எடுப்பதில் சிரமம் இருப்பதால் தொழில் செய்ய முடியவில்லை என செங்கல் உற்பத்தியாளர்களும் கூறினர்.  

கொரோனா காலத்தில் வியாபாரம் இல்லாததால் நகராட்சி கடைகளின் குத்தகைகளை தள்ளுபடி செய்யவும், தொழில் வரியை குறைக்கவும் வணிகர்கள் வலியுறுத்தினர். இதேபோல் கைத்தறி பவானி ஜமக்காள தொழில் நலிவடைந்துள்ளது என நெசவாளர்கள் தரப்பில் எடுத்துக்கூறினர்.பின்னர்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: 

கடந்த காலத்தில் எந்த கட்சிக்காரர்கள் மாமூல் கேட்டு தொந்தரவு செய்தார்கள் என்று தொழில் நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் எங்கள் ஆட்சி காலத்தில் அது போன்ற நிலை தொழில் நிறுவனங்களுக்கு இல்லை. சிறு குறு தொழில் முனைவோர் சுதந்திரமாக செயல்படுகின்றனர். 

அரசைப் பொறுத்தவரை வணிகர்கள் மற்றும் பிற தொழில் நிறுவனங்கள் சிறப்பாக தொழில் செய்ய அரசு தேவையான முயற்சிகளை செய்யும். ஜமக்காளம் தேங்குவதற்கு வியாபார மந்த நிலையே காரணம் . பொதுமக்களிடம் பண புழக்கம் இல்லை.பவானி ஜமக்காள தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் முதல்வர். அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன் உட்பட பலர் உடனிருந்தனர்.


Top