logo
இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்..!

இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்..!

21/Feb/2021 10:59:29

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பெண் குற்றவாளி ஒருவர் முதல் முறையாக தூக்கிலிடப்பட உள்ளார். அதற்காக இதுவரை திறக்கப்படாமல் இருந்த பிரத்யேக அறை திறக்கப்பட உள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஷப்னம் – சலீம் ஆகியோர் காதலித்தனர். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கடந்த 2008-ஆம் ஆண்டு ஷப்னம் வீட்டில் உள்ள அவரது பெற்றோர் உள்பட  7 பேரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.


அதற்கு அவரது காதலர் சலீம் உதவியாக இருந்தார். இதனைடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டை விதித்தது. அதனை 2010-ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றமும், 2015-இல் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இவர்களது கருணை மனுவும் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள சிறையில், பெண்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தனி அறை உள்ளது. இந்த அறை, 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பெண் குற்றவாளி யாரும் தூக்கிலிடப்படவில்லை. இந்நிலையில் மதுராவில் ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.அதற்காக அந்த அறை தற்போது திறக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Top