logo
கல்வி ஏன் அவசியம் என்பதை மாணவர்கள் ஆராய வேண்டும்: கர்னல் கார்த்திகேஷ்

கல்வி ஏன் அவசியம் என்பதை மாணவர்கள் ஆராய வேண்டும்: கர்னல் கார்த்திகேஷ்

15/Feb/2021 06:18:52

புதுக்கோட்டை, பிப்:  கல்வி ஏன் அவசியம் என்பதை மாணவர்கள் ஆராய வேண்டும் என்றார் திருச்சி துப்பாக்கி தொழிவ்சாலையின் பாதுகாப்பு அதிகாரி லெப்டினண்ட் கர்னல்கார்த்திகேஷ்.


புதுக்கோட்டை திருச்சி சாலையில் சத்திய மங்கலம் மேலூரில் செயல்பட்டு வரும் ஐஐபிஎச்எஸ் சேப்டி கல்லூரியில் அக்கல்லூரியின் இணைஇயக்குநர்  ஜி. முருகானந்தம் தலைமையில் நடந்த நிகழச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 

 பாதுகாப்பு பயிற்சி மேற்கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி மேலும் அவர் பேசியதாவது:


கல்வி மாணவர்களுக்கு ஏன் தேவை என ஆராய வேண்டும். பெற்றப் பிள்ளை கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது என மகாத்மா காந்தியடிகளும், உலகத்தையே மாற்றக்கூடிய ஆயுதம் கல்வி என நெல்சன் மண்டேலாவும் கூறியுள்ளார். கல்வி கற்க வேண்டும் என ஏன் சொல்கிறார்கள். ஏனென்றால் இன்று புத்தகம் முன்பு தலை குனிந்து படிக்கும் உங்களை  நாளை   தலை நிமிர்ந்து பார்க்க வைக்கும் வலிமையுள்ள ஆயுதம் கல்வி மட்டும்தான். கல்விதான் நம்மை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும். அந்த  வெற்றியைப் பெற  லட்சியம் தேவை. இந்த குறிக்கோள்தான் உங்களை உயர்த்தும்.


இப்படியான சூழலில் இன்றைய மாணவர்களுக்கு எல்லாமே உடனடியாகவும், நல்லதாகவும் நடக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. கருவிலேயே பல குழந்தைகள் இறந்து போகின்றன. அது போல் அல்லாமல் பல தடைகளைக் கடந்து  நன்றாக வளர்ந்து  கல்லூரியில் படித்து முடித்த  மாணவர்களாகிய உங்களை  இந்த சமுதாயம்  தலை நிமிர்ந்து  பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இது உங்களின் விடாமுயற்சியால் கிடைத்த வெற்றியாகும். கல்வியில் வெற்றி பெற்ற மாணவர்கள்  வாழ்க்கையிலும் வெற்றி பெற ஆசிரியர்கள் பெற்றோர்களை வழிகாட்டியாகக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் சாதனையாளர்களாக மாற முடியும் என்றார் திருச்சி துப்பாக்கி தொழில் சாலை பாதுகாப்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேஷ்.

நிகழ்வுக்கு, கல்லூரி இணை இயக்குநர் முருகானந்தம் தலைமை வகித்தார். தாளாளர் சாந்தி முருகானந்தம் முன்னிலை வகித்தார். பாதுகாப்பு அதிகாரி பாலாஜி மற்றும்  கல்லூரி கலத்து ஆசிரியர்கள் கொண்டனர்.  சிறப்பு பாதுகாப்பு பயிற்சி. மேற்கொண்ட 25 மாணவ,  மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி  முதல்வர் முத்துக்குமார்  நன்றி கூறினார்.

Top