logo
பிப்.23-ல் கருப்பு உடையணிந்து சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டம்

பிப்.23-ல் கருப்பு உடையணிந்து சத்துணவு ஊழியர்கள் சாலைமறியல் போராட்டம்

20/Feb/2021 07:23:07

புதுக்கோட்டை, பிப்: கோரிக்கைகளை வலியுறுத்தி  வருகின்ற  23-ல் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடையணிந்து மாவட்டத் தலைநகரில் நடைபெறும் சாலை மறியல் போராட்டத்து முழு ஆதரவளிக்கப் போவதாக அறிவிப்பு.

 புதுக்கோட்டையில் மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமையில்  சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின்  மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பெ.அன்பு, பொருளாளர் வெ.அன்னபூரணம் ஆகியோர் அறிக்கைகளை முன்மொழிந்து பேசினர்.

தீர்மானங்கள்: 37 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துவரும் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான காலமுறை ஊதியம், சட்ட ரீதியான குடும்பப் பாதுகாப்பு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பெண்கள் தலைமையில் கருப்பு உடையணிந்து மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திரளான ஊழியர்களைப் பங்கேற்கச் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

 அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி வாழ்த்திப் பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்டு மாநில செயலாளர்கள் கு.சத்தி, அ.மலர்விழி ஆகியோர் சிறப்புரையாற் றினர்.  முன்னதாக மாவட்டத் துணைத் தலைவர் துரை.அரங்கசாமி வரவேற்க, கு.ராஜமா ணிக்கம் நன்றி கூறினார்.


Top