logo
நாளை முதல் பழனி முருகன் கோயில் நிர்வாகத்திலுள்ள தங்கும் விடுதிகள் திறப்பு

நாளை முதல் பழனி முருகன் கோயில் நிர்வாகத்திலுள்ள தங்கும் விடுதிகள் திறப்பு

10/Feb/2021 07:32:35

பழனி, பிப்: அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து தங்கும் விடுதிகளும் நாளை(11.2.2021) முதல் பக்தர்கள் தங்குவதற்கு திறந்துவிடப்படுகிறது. 

இது குறித்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி  சுவாமி கோயில் செயல் அலுவலர், தக்கார் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட தகவல்:

அருள்மிகு தண்டாயுதபாணி கவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பக்தர்கள் தங்கும் விடுதிகளான தண்டபாணி நிலையம், சின்னகுமாரர் விடுதி, இடும்பன் குடில் மற்றும் வேலவன் விடுதி ஆகிய தங்கும் விடுதிகள் கோவிட்-19  காரணமாக  கடந்த 12.03.2020-ஆம் தேதி முதல் தமிழக அரசின் உத்தரவுப்படி பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை.

தற்போது தமிழக அரசின் தங்கும் விடுதிகளுக்கான கோவிட்-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி (11.02.202) நாளை  காலை 9.30 மணிக்கு மேல் தங்கும் விடுதிகள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது 

 கோவிட்-19 அறிகுறிகளான காய்ச்சல், சளி, இரும்மல் ஆகியவை தென்பட்டால் அறைகளில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அறைகளின் அளவை பொருத்து நிர்ணயிக்கப்பட்ட நபர்கள் மட்டும் அறைகளில் தங்க அனுமதிக்கப்படுவர்.

பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரும், கிருமி நாசினி தெளித்து கைகள் சுத்தம் செய்த பின்னரே அறைகளில் தங்க அனுமதிக்கப்படுவர் என்று அவர்  தெரிவித்துள்ளார்.

Top