07/Feb/2021 07:21:40
புதுக்கோட்டை, பிப்: அயோத்தியில் ராம ஜென்மபூமி கோயில் கட்டும் திருப்பணிக்கா புதுக்கோட்டை திருவப்பூர் சௌராஷ்ட்ரா சபைசார்பில் திரட்டப்பட்ட நிதி விசுவ ஹிந்து பரிஷத் தென்மாநில தமிழகச் செயலாளர் இராம.சத்தியமூர்த்தியிடம் வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு, திருவப்பூர் சௌராஷ்ட்ரா சபா தலைவர் கே.பி.அசோக் தலைமை வகித்தார். கோவிந்தராஜன் வரவேற்றார் ஆர்.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அயோத்தியில் ராம ஜென்ம பூமி கோயில் கட்டும் திருப்பணிக்கு சௌராஷ்ட்ரா சபா தலைவர் கே.பி.அசோக் விசுவ ஹிந்து பரிஷத் தமிழக தென் மாநில செயலாளர் இராம.சத்தியமூர்த்தியிடம் நிதி வழங்கினார்.
நிதியை பெற்று கொண்டு மாநில செயலர் சத்தியமூர்த்தி பேசுகையில், அயோத்தியில் ராம ஜென்ம பூமி கோயில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின்தொண்டர்கள் நாடு முழுவதும் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வருகின்றனர். ராம பக்தர்களிடம் இருந்து தன்னார்வ நன்கொடைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அதற்கு ரூ.10, ரூ.100, ரூ.1000 கூப்பன்களும் வழங்கப்படும். இந்த கூப்பன்களில் புதிய ராமர் கோயிலுக்கான மாடல் படம் இருக்கும். இது கோடிக்கணக்கான குடும்பங்களை சென்றடை யும் என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில், நிர்வாகிகள் வெங்கடேசன்,சந்தோஷ்குமார் ,கார்த்திகேயன், ராமேஸ்வரம் மண்டல செயலாளர் ராமன், மாவட்டத்தலைவர் ஜெயபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட செயலாளர் கே .அரங்குளவன் நன்றி கூறினார்