logo
அரசின் திட்டங்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி  ஏமாற்றும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

அரசின் திட்டங்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

22/Apr/2021 06:05:24

புதுக்கோட்டை, ஏப்:  மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களைப் பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றும்  இடைத்தரகர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஆதாயம் பெறும் நோக்கத்தில்  செயல்படும்  இடைத்தரகர்கள் மீது  மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்(2016) படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கிறேன் அல்லது பெற்றுத் தருகிறேன் என்று சொல்லி தனிநபரோ, சங்கங்களோ, நிறுவனங்களோ, பணம் அல்லது வேறு எந்த வகையில் ஆதாரம் பெறும் நோக்கில் செயல்பட்டால்.

மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் புதுக்கோட்டை பேருந்துநிலையம் அருகில் சத்தியமூர்த்தி ஹசிங் போர்டு காலனி, எம்எல்ஏ  அலுவலகம் அருகிலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 04322-223678 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.


Top