08/Dec/2020 05:27:54
புதுக்கோட்டை-டிச: ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவைச்சிகிச்சையும் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவர்கள் இன்று(டிச.8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்: ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மத்திய அரசு ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால், அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது நவீன மருத்துவம் ஆயுஷ் என்ற ஒரே கலவை முறைக்குள் 2030-ஆம் ஆண்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
அவ்வாறு அறுவை சிகிச்சை செய்ய ஆயுர்வேத மருத்துவர்கள் அனுமதித்தால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படும் மேலும் அலோபதி மருத்துவர்கள் பல்வேறு படிப்புகள் படித்த பின்னர்தான் அறுவை சிகிச்சை மேற் கொள்வார்கள் ஆனால் ஆயுர்வேத சிகிச்சை முறையில் மருத்துவ படிப்பு படிக்க முடியாத நிலையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் செல்வதால் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்திவிடும் எனவே இந்த சட்டத்தை இந்த சட்டத்தைக் கொண்டுவந்த மத்திய அரசுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, புதுக்கோட்டை திலகர் திடலில் புதுக்கோட்டை இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளைத் தலைவர் டாக்டர் கே.ஹெச். சலீம், கௌரவச்செயலர் டாக்டர் டி. நவரெத்தினசாமி, செயலர் எம். ராஜா, தமிழநாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தலைவர் மரு சலீம் அப்துல் குத்தூஸ்,செயலாளர்கள் மரு பெரியசாமி, மரு இராஜா ராமன், மரு அருள்மணி.
மருத்துவர்கள் சுரேஷ்குமார், சரவணன், இராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சாந்தி அருளானந்தன், செந்தில் அருண், சுகன்யா மற்றும் சையது முகமதுஉள்பட ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும், வரும் 11-ஆம் தேதி காலை 6 மணி முதல் 12-ம் தேதி காலை 6 மணி வரை வெளி நோயாளிகள் சிகிச்சை செய்யப்படாது என்றும் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.