logo
ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட  அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 36 பேர் கைது

ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 36 பேர் கைது

02/Feb/2021 08:45:39

ஈரோடு,பிப்:  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 36 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.  இதையடுத்து,    ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு தொடங்கிய மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராக்கி முத்து மாநில பொருளாளர் பேயத் தேவன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

 முன்னதாக மாநில துணைத் தலைவர் சீனிவாசன் மாவட்ட செயலாளர் விஜய் மனோகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் நூலகங்கள் எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் வரை 2 லட்சம் ஊழியர்கள் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்.

 சாலைப் பணியாளர்களின் 41 மாத காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவிலுக்கு திடீரென அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்தனர்.

Top